Friday, September 16, 2011

சர்வதேச ஓசோன் தினம்


சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

 கனடா நாட்டு தலை நகரில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஓசோன் படுகையை நாசம் செய்யும் ரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்த தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
விளைவுகள்: கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 விழுக்காடு புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது.

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.
1993-ஆம் ஆண்டு முதல் மாண்ட்ரீல் உடன்படிக்கையை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நாடுகள் இந்த ரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்பட்டன.

இந்த அடிப்படையில் குளோரோ ஃபுளோரோ கார்பன் (சி.எஃப்.சி.) ரசாயனங்களை முற்றிலும் கட்டுப்படுத்திய நடவடிக்கையை இந்தியா நிறைவேற்றியது. அதாவது, குறித்த நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே இந்தியா இந்த காரியத்தை நிறைவேற்றியுள்ளது.

மெதில் குளோரோஃபார்ம் உள்ளிட்ட பிற சி.டி.சி. ரசாயங்களின் பயன் மற்றும் உற்பத்தியையும் இந்தியா 85 விழு‌க்காடு கட்டு‌ப்படுத்தியுள்ளது. ஹேலோன்கள் 2003ஆம் ஆண்டு முதலே நிறுத்த‌ப்பட்டு வந்து இப்போது முழுதும் இதன் உற்பத்தி, நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்காக 2007-ஆம் ஆண்டு இதே தினத்தில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட மான்ட்ரீலில் மான்ட்ரீல் உடன்படிக்கை சிறந்த அமலாக்க விருது இந்தியாவிற்கு அளிக்கப்பட்டது.

பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.


* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.


* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.


* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.


* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.


* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்.

Post Comment

No comments:

Post a Comment