நம்நாட்டில் கடைசியாக 1931ம் ஆண்டு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜாதி வாரியாக மக்கள் தொகையை அறிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் விரும்பினால் மட்டும் ஜாதியை குறிப்பிடலாம் என அறிவித்துள்ளது.
இஸ்லாத்தில் ஜாதி போன்ற பேதங்கள் இல்லை என்றாலும், நாம் வாழும் நாட்டில், ஜாதி மற்றும் இனபேத அடிப்படையிலேயே நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றது. குறிப்பாக முஸ்லிம்களின் அடிப்படை கோரிக்கையான இடஒதுக்கீடு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்படலாம். மேலும், முஸ்லிம் என்று மட்டுமே இருந்தால் அதன் அடிப்படையில் நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. அதில் உட்பிரிவான லப்பை என்று இருந்தால் மட்டுமே இடஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பெற முடியும் என்பது குறிப்பிட தக்கது. எனவே இதனை முஸ்லிம்கள் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிஸம்பர் மாதத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும். "முஸ்லிம்" என்று பதிவது தவறு. இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
•லெப்பை
•ஸெய்யது
•தக்கனி முஸ்லிம்
•அன்ஸார்
•ஷேக்
•மாப்பிள்ளை
•துத்திகோலா
முக்கிய குறிப்பு: ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது "ஸாயிபு, பட்டாணி, ஷரீப், பரிமா" என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
-முஹம்மது முனீர்
துணைத் தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
நன்றி: Intjonline.in
No comments:
Post a Comment