Saturday, June 18, 2011

கல்வி கட்டணத்தை சரிபார்த்துக்கொள்ள தனி தளம்



தனியார் பள்ளிகளுக்கு நீபதிபதி ரவிராஜ் பாண்டியன் கமிட்டி புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,355 பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இந்த கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ரூ.3 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை கட்டணம் அறிவிக்கப்பட்டது. மறு கட்டணம் நிர்ணயத்தை சில தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கட்டணம் போதாது என்று மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தன.

தனித்தனியாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கட்டணம் குறித்த பட்டியல் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அந்த பட்டியலை பெற்ற பள்ளிகள் அதன் விவரங்களை மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகையில் ஒட்ட வேண்டும் ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றவில்லை.

அதனால் மாணவர்களுக்கு வசதியாக கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. 6355 பள்ளிகளுக்கான கட்டண விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.http://www.tn.gov.in/ , http://pallikalvi.in/ என்ற அரசின் இணைய தளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Post Comment

No comments:

Post a Comment