Tuesday, May 31, 2011

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்!


World No Tobacco Dayஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

புகையிலை குறித்தும் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை பற்றியும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நாளை புகையிலை எதிர்ப்பு நாளாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர்.

16 லட்சம் இந்தியர்கள் மரணம்

புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகையால் ஏற்படும் பாதிப்புகள்

புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும்.

எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் காணப்படும் என்று கூறும் மருத்துவர்கள் புகையை கைவிடுவது எளிது என்கின்றனர்.

வருங்கால சமுதாயத்தினர் புகையை உயிரைக் கொல்லும் பகையாக கருதி விட்டுவிட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் வேண்டுகோள் மட்டுமல்ல வளர்பிறையின் ஆசையும்கூட

Post Comment

Monday, May 30, 2011

நகரங்களை ஓரம் கட்டிய கிராமம்!.


பிளஸ்-2-வை போல் 10-ம் வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டிய கிராமத்து மாணவிகள்: படிப்புக்கு ஏழ்மை தடையில்லை என்று நிரூபித்தார்கள்.

எம் புள்ள டாக்டர் ஆவணும்... என்ஜினீயர் ஆவணும்... என்று எல்லா பெற்றோரும் கனவு காண்கிறார்கள். பிள்ளைகளின் படிப்புக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளில் படித்தால்தான் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்ற தவறான எண்ணம்தான் இதற்கு காரணம். ஆனால் படிப்புக்கு நகரம், கிராமம் என்ற பேதம் இல்லை. நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமத்து மாணவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் கிராமப்புற மாணவ-மாணவிகளே சாதித்து காட்டினார்கள்.  வெளியிடப்பட்ட 10-ம்வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டி கிராமத்து மாணவ-மாணவிகள் சாதனை முத்திரை பதித்துள்ளார்கள்.

மாணவிகள் மின்னலா தேவி, சங்கீதா, நித்யா, ரம்யா, ஹரிணி ஆகிய 5 பேரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்கள். மின்னலாதேவி செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், நித்யா ஸ்ரீவில்லிபுத்தூர் எச்.எச். மேல்நிலைப்பள்ளியிலும், ரம்யா மூலவாய்க்கால் ஸ்ரீகுருகுலம் பள்ளியிலும், சங்கீதா சேலம் ஆத்தூர் பெரியேரி முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி பள்ளியிலும், ஹரிணி திருவொற்றியூர் அவர் லேடி மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.

495 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பிடித்த மேலப்பாளையம் சதாம் உசேன், தூத்துக்குடி பாக்கியஸ்ரீ, பரமக்குடி அருண் ராஜா, சாத்தூர் ஜெயப்பிரியா, ராஜபாளையம் ஹரிபாரதி, பொன்மணி, பொன்னேரி சீனிரதி ஆகியோரும் கிராமத்து சாதனையாளர்கள். இவர்களைப் போல் 3-வது இடத்தை பிடித்த நாகர்கோவில் நிம்ருதா, லட்சுமி பிரியா, சாத்தூர் உமா, உடுமலைப்பேட்டை குங்கும அகல்யா, கவுந்தப்பாடி இந்து, சங்ககிரி லோகேஷ்குமார், கீரனூர் விக்னேஷ்வரி, காரிமங்கலம் காவ்யா, உள்பட 24 பேரில் பெரும்பாலானோர் கிராமப்புற பள்ளிகளில் படித்து சாதனை படைத்துள்ளார்கள்.

தொடர்ந்து 26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சாதனையாளர்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் வளர்ச்சி அடைந்த பெருநகரமான சென்னையில் பிரபல பள்ளிகள் என்ற முத்திரையோடு அண்ணாந்து பார்க்க வைக்கும் பள்ளிகள் பல உள்ளன. ஆனால் இந்த பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. கிராமப்புற மாணவ- மாணவிகளின் இந்த விஸ்வரூப வெற்றி சாதனை நகரவாசிகளை மிரள வைத்துள்ளது. நுனி நாக்கு ஆங்கிலம், கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள், அத்தனையும் இருந்தும் கிராமப்புற மாணவ-மாணவிகளிடம் போட்டியிட முடியாதது ஏன் என்று சிந்திக்க வைத்துள்ளது.

இதே வசதி-வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்தால் எட்ட முடியாத சாதனை சிகரத்தை தொடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதேபோல் ஏழை- பாழைகளின் பிள்ளைகளும் சாதிக்கப் பிறந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகி உள்ளது. மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்த நெல்லை மேலப்பாளையம் மாணவன் சதாம் உசேனின் தாயும், தந்தையும் பீடி தொழிலாளர்கள். சென்னை பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவி ராதிகாவுக்கு தந்தை இல்லை. தாய் வசந்தி தெரு தெருவாக எலுமிச்சைப்பழம் விற்று மகளை படிக்க வைத்துள்ளார். இப்போது டி.ஜி.பி. அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

2-வது இடத்தை பிடித்த மாணவி அனுசுயாவின் தந்தை ஆட்டோ டிரைவர். மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்த கவரப் பேட்டை மாணவி சீனிரதியின் தந்தை வெள்ளைச்சாமி நாடார் இனிப்பு பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார்.

மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்த பல்லாவரம் ஷபானாவின் தந்தை செய்யது முகம்மது சமையல் தொழிலாளி ஆவார். மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாணவர் தனசேகரின் தந்தை இறந்து விட்டார். தாய் இந்திரா மீன் வியாபாரம் செய்து வருகிறார். படிப்புக்கு ஏழ்மை தடை இல்லை. கடின உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை இவர்கள் எடுத்துக்காட்டி உள்ளார்கள். சாதனை படைத்த கண்மணிகள் ஒவ்வொருவரும் டாக்டர் ஆவேன், கலெக்டர் ஆவேன் என்று தங்கள் லட்சிய கனவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன் அந்த மாவட்டத்தில் சாதனை படைக்கும் மாணவர்கள் வீட்டுக்கு சென்று பாராட்டுவேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி மாநில அளவில் 2-வது இடம் பெற்ற பாக்கியஸ்ரீ வீட்டுக்கு தனது மகன்களுடன் சென்று கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கலெக்டர் கொடுத்த இந்த உற்சாகம் வரும் தலைமுறைக்கு உந்துதலாக அமையும். கிராமங்கள்தான் நாட்டின் உயிர் நாடி என்று வாயளவில் பலரும் சொல்லி வருகிறார்கள். அதை மெய்ப்பித்த மாணவ செல்வங்களுக்கு ஜே.

Post Comment

Thursday, May 26, 2011

SSLC தேர்வு முடிவுகள் நாளை காண‌!


பள்ளிகளின் மூலமாகவும், பல்வேறு இணையதளங்கள், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதளங்கள்:


குறுஞ்செய்தி (SMS) மூலம் தேர்வு முடிவுகளை அறியwww.tnpubliclibraries.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Post Comment

ஓர் முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதியாகிறார்!


[ ''இந்நேரம்.காம்'' இணையதளத்தில் வெளியான இந்த மடலை இங்குமறு பதிவு செய்கிறோம்.]
இந்நேரம்.காம் .திரு. ஆசிரியர் அவர்களுக்கு,
இரு தினங்களுக்குமுன் "முல்லா ஓமர் கொல்லப்பட்டார்" என்ற செய்தியைப் பல்வேறு செய்தித் தளங்களிலும் தலைப்புச் செய்தியாக வாசிக்க நேர்ந்தது. இச்செய்தியை தினமணி, தினமலர் மற்றும் தட்ஸ்தமிழ் ஆகிய தமிழ் செய்தித்தளங்கள் வெளியிட்டிருந்தனர். அவர்களோடு இந்நேரம்.காமும் இச்செய்தியை வெளியிட்டிருந்ததையும் கவனித்தேன், என்றாலும் நான் அவதானித்த நுண்ணிய வேறுபாட்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முல்லா ஓமர் என்பவரை அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான்மீது படையெடுக்கும்வரை அநேகமாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
9/11 தாக்குதலுக்குக் காரணம் பின்லேடன் என்பதாக சர்வதேச செய்தி ஊடகங்களும் அமெரிக்காவின் குரலையே எதிரொலித்த நிலையில், "பின்லேடன் தங்கள் நாட்டின் கவுரவ விருந்தினர் என்றும், 9/11 தாக்குதலுக்குப் பின்லேடன் காரணம் என்பதற்கான ஆதாரங்களை ஒப்படைத்தால், முறையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தவர்தான் முல்லா ஓமர்.
உலகச்சந்தையில் கொடிகட்டி பறந்த ஓபியம் என்ற போதைப்பொருளை ஐ.நா சபையின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, ஒழித்துக் கட்டுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டியபோதும் அதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் அப்போதைய ஆப்கன் ஜனாதிபதியாக இருந்த முல்லா ஓமர், ஒரேயொரு சட்டம் போட்டு சிலமாதங்களிலேயே பெருமளவில் குறைத்தார். மேலும், ஓபியம் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் நிறைவேற்றியதை ஐ.நா மற்றும் அமெரிக்காவும் பாராட்டியதோடு, முல்லா ஓமரின் அரசுக்கு உதவுவதற்காக நிதி உதவியும் செய்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
போலியான காரணங்களைச் சொல்லி, முன்முடிவுடன் போரிட்ட அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு ஐநாவும் உலகநாடுகளும் ஒத்து ஊதியதால், உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக போர்நிறுத்தம் மேற்கொண்டு தலை மறைவாக இருக்கும் ஆப்கானின் முன்னால் ஜனாதிபதி முல்லா ஓமரை, பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாகச் சொன்னது. தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்ட இச்செய்தியில் முல்லா ஓமரை அவன் - இவன் என்றும், பயங்கரவாதி என்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
தட்ஸ்தமிழ் செய்தியாளாருக்கு முல்லா ஓமர் பயங்கரவாதி என்பது எப்படி தெரியும்? ஜனநாயக முறைப்படி ஒரு நாட்டுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமெரிக்காவின் எதிரிக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தார் என்ற காரணமன்றி, அதுவும் ஆதாரங்களை சமர்ப்பித்தால் விசாரித்து தண்டனை வழங்குவோம் என்று சொல்லியும், அமெரிக்கா அத்தகைய ஆதாரங்கள் எதையும் வழங்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் ஜனாதிபதியை எப்படி பயங்கரவாதி என்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது!
தங்கள் நாட்டின்மீதான ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களெல்லாம் பயங்கரவாதிகள் என்றால் நமது தேசப்பிதா காந்தி உள்ளிட்ட சுதந்திரப்போராட்டத் தியாகிகள் அனைவருமே இவர்களின் பார்வையில் பயங்கரவாதிகளா? என்று கேட்கத் தோணுகிறது.
ஒரு நாடு குற்றம் சுமத்தியுள்ள ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் ஜனாதிபதிகளெல்லாம் பயங்கரவாதிகள் என்றால், மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளி என அமெரிக்காவே ஒப்புக் கொள்ளும் டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பயங்கரவாதி தானே? தட்ஸ்தமிழ்.காம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவன் - இவன் என ஏக வசனத்திலும் பயங்கரவாதி ஒபாமா என்றும் தன் செய்திகளில் குறிப்பிடுமா?
பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு மாநகராட்சிக்கு ஒருவர் என்றளவில்கூட செய்தியாளர்கள் இருப்பதில்லை. இணையத்தில் மட்டும் செயல்படும் தட்ஸ்தமிழ்.காம் ஆங்கிலச் செய்திகளையும், பிற ஊடகங்களின் செய்திகளையும் வெட்டி, ஒட்டி சுட்டுதான் செய்திகளை நிரப்புகிறது என்பதை இணையத்தில் வலம்வரும் எம்போன்ற வாசகர்கள் அறிவர். இந்த லட்சணத்தில் எல்லைதாண்டிய செய்திகளை ஏனோதானோவென, பத்திரிக்கை தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் செய்தி வெளியிடுகிறார்களே என்ற வேதனையில்தான் இதை வாசகர் மடல் பகுதிக்கு அனுப்புகிறேன்.
எம்போன்ற நடுநிலை வாசகர்களின் எதிர்பார்ப்பை இத்தகைய செய்தித்தளங்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதால் முடிந்தவரை அவர்களின் செய்திகளை சீரியசாக எடுக்கப்போவதில்லை. இந்நேரம்.காமில் வாசகர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடுநிலை செய்திகளும் வருவதாக அலுவலக நண்பர் சொன்னதன்பேரில் இந்த மடலை எழுதினேன். பிரசுரிக்கத் தகுதியானது என்று கருதினால் தயவு செய்து அடித்தல்/திருத்தலின்றி உங்கள் தளத்தில் வெளியிடவும்.
"மெய்ப்பொருள் காண்பதறிவு" தமிழ் வாழ்க! தமிழன் வாழ்க!

Post Comment

Wednesday, May 25, 2011

+2 மேலே என்ன படிப்பது.. எங்கு படிப்பது.. பட்டபடிப்பு உதவி…


+2  தேர்வுகளை முடித்தவர்களுக்கு உதவியாக, கீழே தமிழகத்தில் உள்ள பட்டபடிப்புகளின் வகைகளை மற்றும்  சென்னை கல்லூரிகளின் பெயர் மற்றும் இணைய தள முகவரிக்கான தொடர்பையும் தொகுத்துள்ளோம்:

அக்கவுன்ட்டிங் – பைனான்ஸ் – பி.காம்.,
அக்கவுன்ட்டிங் – பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை – பி.காம்.
நவீன விலங்கியல் – பி.எஸ்சி.,
மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் – பி.எஸ்சி.,
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் – பி.டெக்.
வேளாண்மை பொறியியல் – பி.டெக்.
வேளாண்மை – பி.எஸ்சி.,
வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் – பி.இ.,
பழங்கால இந்திய வரலாறு – பி.ஏ.
மானுடவியல் – பி.ஏ.,
ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் – பி.எஸ்சி.,
அரபு – பி.ஏ.,
ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் – பி.ஏ.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – பி.இ.,
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – பி.டெக்.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்(சுயநிதி) – பி.இ.,
ஆட்டோமொபைல் டெக்னாலஜி – பி.டெக்.
வேளாண்மை – பி.அக்ரி.,
கட்டடக்கலையியல் – பி.ஆர்க்.,
ஆயுர்வேத மருந்தாளுகை – பி.பார்ம்
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை – பி.ஏ.எம்.எஸ்
நூலக அறிவியல் – பி.எல்.ஐ.எஸ்சி.,
பார்மசி – பி.பார்ம்.,
பிசியோதெரபி – பி.பி.டி.,
சித்த மருத்துவமும் அறுவை சிகிச் சையும் – பி.எஸ்.எம்.எஸ்.,
வங்கி மேலாண்மை – பி.காம்.,
பயோ இன்ஜீனியரிங் – பி.இ.,
பயோ டெக்னாலஜி – பி.டெக்.
பயோ டெக்னாலஜி(சுயநிதி) – பி.டெக்.
பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
பயோகெமிஸ்ட்ரி – பி.எஸ்சி.,
உயிரி அறிவியல் – பி.எட்.,
பயோ டெக்னாலஜி – பி.டெக்.
பயோடெக்னாலஜி – பி.எஸ்சி
தாவரவியல் – பி.எஸ்சி.,
தொழில் நிர்வாகம் – பி.பி.ஏ.,
தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – பி.பி.ஏ., (சி.ஏ)
தொழில் மேலாண்மை – பி.பி.எம்.,தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – பி.பி.எம்.,
வாணிபக் கணக்கு – பி.காம்.,
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் – பி.எஸ்சி.,
கேட்டரிங் சயின்ஸ் – ஓட்டல் நிர்வாகம் – பி.எஸ்சி
செராமிக் டெக்னாலஜி (சுயநிதி) – பி.டெக்.
கெமிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
கெமிக்கல் இன்ஜினியரிங் – பி.டெக்.
ரசாயன தொழில்நுட்பம் – பி.டெக்.
வேதியியல் – பி.எஸ்சி.,
சிவில் இன்ஜினியரிங் – பி.இ.
கிளினிக்கல் இன்ஜினியரிங் – பி.இ
கிளினிகல் நியூட்ரிசன் – பி.எஸ்சி
உணவூட்டம் மற்றும் உணவுக் கட்டுப்பாட் டியல் – பி.எஸ்சி.,
கூட்டுறவு – பி.காம்.,
கூட்டுறவு – பி.ஏ.,
வணிகவியல் – பி.காம்.,
வணிகவியலும் கணக்கியலும் – பி.காம்.,
வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம் – பி.காம்.
வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் – பி.காம்.,
வணிகவியல் மற்றும் இ-காமர்ஸ் – பி.காம்.
வணிகவியல் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செகரட்டேரியல் ப்ராக்டீஸ் – பி.காம்.,
கம்ப்யூட்டர் உதவியுடனான கட்டமைப்பு பொறியியல் – பி.இ.,
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் – பி.சி.ஏ.,
கம்ப்யூட்டர் அறிவியல் – பி.எஸ்சி
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் – பி.இ
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சுயநிதி) – பி.இ
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் – பி.எஸ்சி
கார்ப்பொரேட் பொருளாதாரம் – பி.ஏ.,
காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பாஷன் டெக்னாலஜி – பி.எஸ்சி.,
ஆடற்கலை – பி.எப்.ஏ.,
பாதுகாப்பு மற்றும் வியூகவியல் – பி.ஏ.,
பல் அறுவை சிகிச்சை – பி.டி.எஸ்.,
பொருளாதாரம் – பி.ஏ.,
பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி – பி.ஏ.,
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – பி.இ.
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்(சுயநிதி) – பி.இ.
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (சான்ட்விச்) – பி.இ.
எலக்ட்ரானிக் மீடியா – பி.எஸ்.சி
எலக்ட்ரானிக்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சயின்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் – பி.எஸ்சி
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் – பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்(சுயநிதி) – பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் – பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – பி.டெக்
எலக்ட்ரானிக்ஸ்சயின்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் – பி.இ.எஸ்
ஆங்கிலம் – பி.ஏ.,ஆங்கிலம் – பி.லிட்
ஆங்கிலம் – பி.ஏ. (ஹானர்ஸ்)
ஆங்கில மொழியும் இலக்கியமும் – பி.ஏ.,
ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் – பி.ஏ.,
ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – பி.ஏ.,
பாஷன் தொழில் நுட்பம் – பி.டெக்.,
பாஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைன் – பி.எஸ்சி.,
நிதி கணக்கியல் – பி.சி.ஏ.,நுண்கலை – பி.எப்.ஏ.,
பயர் இன்ஜினியரிங் – பி.இமீன்வள அறிவியல் – பி.எப்.எஸ்சி.,
புட் ப்ராசஸ் இன்ஜீனியரிங் – பி.டெக்.,
உணவு தயாரிப்பு – பி.எஸ்சி
உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் – பி.எஸ்சி.,
உணவு தொழில் நுட்பம் – பி.டெக்.,
உணவு தொழில் நுட்பம்(சுயநிதி) – பி.டெக்.,
பிரெஞ்சு இலக்கியம் – பி.ஏ.,
பொது சட்டம் – பி.ஜி.எல்.,
ஜெனிடிக் இன்ஜினியரிங் – பி.இ.,
ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் – பி.இ.,
புவியியல் – பி.எஸ்சி.,
சுற்றுலா புவியியல் மற்றும் பயண மேலாண்மை – பி.எஸ்சி.,
இந்தி – பி.ஏ.,
ஹிந்தி – பி.ஏ. (ஹானர்ஸ்)
இந்தி இலக்கியம் – பி.ஏ.,
வரலாற்றுக்கல்வி (ஹிஸ்டாரிகல் ஸ்டடிஸ்) – பி.ஏ.,
வரலாறு – பி.ஏ.,
வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை – பி.ஏ.,
ஹோம்சயின்ஸ் – பி.எஸ்சி., ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாகம் – பி.எஸ்சி
ஹோட்டல் மேனேஜ்மென்ட் – பி.எஸ்சி.,
ஹோட்டல் நிர்வாகம் – கேட்டரிங் டெக்னாலஜி – பி.எஸ்சி
இந்திய கலாசாரம் – பி.ஏ.,இந்திய இசை – பி.ஏ.,
இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி – பி.டெக்.
இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி(சுயநிதி) – பி.டெக்.
தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் – பி.எஸ்சி.,
இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் – பி.இ.,
தொழிற்சாலை பாதுகாப்பு – சான்றிதழ் படிப்புகள்
தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் – பி.எஸ்சி.,
தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் – பி.ஐ.எஸ்.எம்.,
தகவல் தொழில்நுட்பம் – பி.டெக்.
தகவல் தொழில்நுட்பம் – பி.எஸ்சி.,
தகவல் தொழில்நுட்ப மேலாண்மை – பி.எஸ்.
தகவல் தொழில்நுட்பம்(சுயநிதி) – பி.டெக்.
இதழியல் – பி.ஏ.,
லெதர் டெக்னலாஜி – பி.டெக்.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் – பி.எல்.ஐ.எஸ்சி.,
மலையாள இலக்கியம் – பி.ஏ.,
மரைன் இன்ஜினியரிங் – பி.இ.,
மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் – பி.பி.ஏ.
மார்க்கெட்டிங் மேலாண்மை – பி.காம்.,மாஸ் மீடியா – பி.ஏ.
கணிதவியல் – பி.எஸ்சி.,
கம்ப்யூட்டர் பயன்பாட்டுடனான கணிதவியல் – பி.எஸ்சி., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சுயநிதி) – பி.இ.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு) – பி.இ.,
மெக்கட்ரானிக்ஸ் – மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – பி.இ.,
மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் – பி.எஸ்சி.,
மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
நுண்ணுயிரிகள் – பி.எஸ்சி.,
மைனிங் இன்ஜினியரிங் – பி.இ.,
இசை – பி.ஏ.,
நாட்டியம் – பி.ஏ.,
நியூக்ளியர் இன்ஜினியரிங் – பி.இ
நர்சிங் – பி.எஸ்சி.,ஊட்டச்சத்து – பி.எஸ்சி
உணவூட்டம் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் – பி.எஸ்சி.,
ஊட்டச்சத்து உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை – பி.எஸ்சி.,
ஆக்குபேஷனல் தெரபி – பி.எஸ்சி.,(ஹானர்ஸ்)
ஆக்குபேஷனல் தெரபி – பி.ஓ.டி.,
ஆப்டோமெட்ரிஸ்ட் – பி.எஸ்சி.,ஆப்டோமெட்ரி – பி.ஆப்ட்.,
காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழில் நுட்பம் – பி.டெக்.,
பெட்ரோலியம் டெக்னாலஜி – பி.டெக்.
பெட்ரோலியம் இன்ஜினியரிங் – பி.இ.
பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் நுட்பம் – பி.டெக்.,
பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி – பி.பார்ம்.,
பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பம் – பி.டெக்.,
பார்மாசுட்டிகல் தொழில் நுட்பம் – பி.டெக்.,
பார்மசூட்டிக்கல்ஸ் – பி.பார்ம்.,பார்மகாக்னோசி – பி.பார்ம்.,
பார்மகாலாஜி – பி.பார்ம்.,தத்துவவியல் – பி.ஏ.,
உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு – பி.எஸ்சி.,
இயற்பியல் – பி.எஸ்சி.யிர்
தாவரவியல் மற்றும் பயிர் உயிர் தொழில் நுட்பம் – பி.எஸ்சி.,
பயிர் தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பம் – பி.எஸ்சி.,
அரசியல் அறிவியல் – பி.ஏ.,
பாலிமர் டெக்னாலஜி – பி.டெக்.
பிரின்டிங் டெக்னாலஜி – பி.இ.
உற்பத்தி பொறியியல் – பி.டெக்.
உற்பத்தி பொறியியல் – பி.இ.
உற்பத்தி பொறியியல் (சான்ட்விச்) – பி.இ.
உளவியல் – பி.ஏ.,உளவியல் – பி.ஏ.,
புனர்வாழ்வு அறிவியல் – பி.ஆர்.எஸ்.சி.,
மதம், தத்துவம், சமூகவியல் – பி.ஏ.,
ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி – பி.டெக்.,
ரப்பர் டெக்னாலஜி – பி.டெக்.
ஊரக வளர்ச்சி – பி.எஸ்சி.,
கிராம வளர்ச்சி அறிவியல் – பி.எஸ்சி.,
சமஸ்கிருதம் – பி.ஏ.,
சமஸ்கிருத இலக்கியம் – பி.ஏ.,
சான்ஸ்கிரிட் விஷாரத் – பி.ஏ.
சமூக அறிவியல் – பி.எட்.,
சமூகப் பணி – பி.எஸ்.டபிள்யூ.,
சமூகவியல் – பி.ஏ.,
புள்ளியியல் – பி.எஸ்சி.,
தமிழ் – பி.லிட்.,
தமிழ் மொழியும் இலக்கியமும் – பி.ஏ.,
தெலுங்கு இலக்கியம் – பி.ஏ.,
டெக்ஸ்டைல் வேதியியல் – பி.டெக்.,
டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் – பி.இ
டெக்ஸ்டைல் டெக்னாலஜி – பி.டெக்.
சுற்றுலா – பி.ஏ.,
சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை – பி.எஸ்சி.,
பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை – பி.ஏ.,
யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை – பி.யு.எம்.எஸ்.,
உருது இலக்கியம் – பி.ஏ.,(அலங்கார்)
வேதா – பி.ஏ.
கால்நடை அறிவியல் – பி.வி.எஸ்சி.,
விலங்கியல் – பி.எஸ்சி.,

மாணவ மாணவியரின் வசதிக்காக சென்னை கல்லூரிகளின் பெயர்  முகவரிக்கான தொடர்பையும் கீழே வழங்கியுள்ளோம்: பயன் பெறுங்கள்:

Arts & Science

Asan Memorial College of Arts and Science, Chennai

Bhaktavatsalam Memorial College for Women, Chennai

Meenakshi College for Women, Chennai

Sriram College of Arts and Science, Chennai

Tagore College of Arts and Science, Chennai

Vels University (Vel’s College of Science), Chennai

A.M. Jain College (Men), Chennai

Bharathi’s Women’s College (Autonomous), Chennai

C. Kandasami Naidu College for Men, Chennai

Chellammal Women’s College of the Pachaiyappa’s Trust, Chennai

Dhanraj Baid Jain College (Autonomous), Chennai

Dharmamurthi Rao Bahadur Calavala Cunnan Chetty’s Hindu (D.R.B.C.C.C.H.) College, Chennai

Dr. Ambedkar Government Arts College, Chennai

Dwaraka Doss Goverdhan Doss Vaishnav College, Chennai

Ethiraj College for Women (Autonomous), Chennai

Govt. Arts College for Men (Autonomous), Chennai

Guru Nanak College, Chennai

Justice Basheer Ahmed Syed College for Women, Chennai

Loyola College (Autonomous), Chennai

Madras Christian College (Autonomous), Chennai

New College (Autonomous), Chennai

Pachaiyappa’s College, Chennai

Presidency College (Autonomous), Chennai

Quaid-e-Millet College, Chennai

Quaid-e-Millet Government Arts College for Women (Autonomous), Chennai

Queen Mary’s College (Autonomous), Chennai

Ramakrishna Mission Vivekananda College (Men), Chennai

S.D.N. Bhatt Vaishnav College for Women, Chennai

S.I.V.E.T. College, Chennai

St. Louis College for the Deaf, Chennai

Stella Maris College for Women (Autonomous), Chennai

Women’s Christian College (Autonomous), Chennai

A.A. Arts and Science College (Women), Chennai

Alpha Arts and Science College, Chennai

Anna Adarsh College for Women, Chennai

Annai Veilankanni’s College of Arts and Science, Chennai

Annai Violet Arts and Science College, Chennai

C.T.M. College of Arts and Science, Chennai

Chennai National College (Arts and Science), Chennai

Chevaliar T. Thomas Elizabeth College for Women, Chennai

Dr. M.G.R. Janaki College of Arts and Science for Women, Chennai

Guru Shree Shanti Vijai Jain College for Women, Chennai

Hindustan College of Arts and Science, Kelambakkam

Indian Harvard Arts and Science College, Chennai

J.A. Arts and Science College, Chennai

Jayagovind Harigopal Agarwal Agarsan College, Chennai

K.C.S. Kasi Nadar College of Arts and Science, Chennai

Kumara Rani Meena Muthiah College of Arts and Science for Women, Chennai

M.O.P. Vaishnav College for Women (Autonomous), Chennai

Madha Arts and Science College, Chennai

Mahalakshmi College of Arts and Science, Chennai

Mar Gregorios Arts and Science College, Chennai

Mohamed Sathak College of Arts and Science, Chennai

Nazareth College of Arts and Science, Chennai

New Prince Shri Bhavani Arts and Science College, Chennai

Patrician College of Arts and Science, Chennai

Poonga College of Arts and Science, Chennai

Prince Shri Venkateshwara Arts and Science College, Chennai

Prof. Dhanapalan College for Women, Chennai

R.B. Gothi Jain College for Women, Chennai

S.R.M. Arts and Science College, Chengalpattu Taluk

Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women, Chennai

Sindhi College of Arts and Science, Chennai

Sir Theagaraya College, Chennai

Soka Ikeda Arts and Science College for Women, Chennai

Sri Kanniga Parameswari Arts and Science College for Women, Chennai

Sri Muthukumarasamy College, Chennai

St. Joseph’s College (Arts and Science), Chennai

St. Thomas College of Arts and Science, Chennai

T.M.G. College of Arts and Science, Chennai

T.S. Narayanasamy College of Arts and Science, Chennai

Tamilnadu Arts and Science College, Chennai

Thirumurugan College of Arts and Science, Thiruvallur

Thiruthangal Nadar College, Chennai

Vailakanni Malathy Pannicker College of Arts and Science, Chennai

Valliammal College for Women, Chennai

Vel Sri Ranga Sanku College, Chennai



Homoeopathy
Medical
Occupational Therapy
Nursing
Pharmacy

Dental
Engineering

Management

Vinayaka Centennail Canadian Business School, Chennai

Polytechnic 
Physiotherapy
நன்றி சூரியன் tv

Post Comment