இறை வல்லமையின் உண்மைகளை அறிந்து கொண்டே பொய்யின் பக்கம் செல்லாதீர்!
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான். (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:21-22)
இந்த மாதம்
ஜீன் ஹென்றி டூனாந் Jean Henri Dunant,
மே 8,1828- அக்டோபர் 30, 1910) செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை இன்னொருவருடன் பகிர்ந்து பெற்றார்.
வரலாற்றில் இன்று
1450 - இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 - கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1886 - ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 - கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1914 - பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 - அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
1984 - லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 - புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
கணனி உலகம்
அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்
அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்றும் எண்ணம் உண்டு.
புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் வடிவமைப்பதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. LOONA PIX.COM: இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ பிரேம், அனிமேஷன், காலண்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். இத்தளத்தில் வடிவமைக்கப்படும் புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இத்தளத்தில் இருந்தே அனுப்பலாம்.
இணையதள முகவரி
2.LUNA PIC: இந்த தளமானது ஒரு ஓன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் Edit Your Profile Picture For Face Book, Animation, Rotating Cube, Add Text இவற்றுடன் பெயிண்டிங் வசதியும் உண்டு.
இணையதள முகவரி
3. FLAUNT R: இந்த தளத்தில் 1000க்கு மேற்பட்ட போட்டோ அனிமேஷன் உள்ளது. இந்த தளத்தில் இருந்து 30க்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான Profile புகைப்படத்தை வடிவமைக்க முடியும்.
தகவல் களம்
10-ம் வகுப்பு தகுதிக்கு போலீசில் கான்ஸ்டபிள் பணி; காலியிடங்கள்: 416
இந்தோ திபெத் எல்லை காவல்படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள 416 காலியிடங்களை நிரப்ப தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு:
1. பணியின் பெயர்: Constable (Cook)
காலியிடங்கள்: 123 (பொது-63, OBC-33, SC-18, ST-9)
2.பணியின் பெயர்: Constable(Washermen)
காலியிடங்கள்: 49 (பொது-26, OBC-13, SC-7, ST-3)
3. பணியின் பெயர்: Constable(Barber)
காலியிடங்கள்: 41 (பொது-22, OBC-10, SC-6, ST-3)
4.பணியின் பெயர்: Constable(Water Carrier)
காலியிடங்கள்: 86 (பொது-45, OBC-23, SC-12, ST-6 )
5.பணியின் பெயர்: Constable(Sfai Karamchari)
காலியிடங்கள்: 117 (பொது-61, OBC-31, SC-17, ST-8)
வயது வரம்பு: 30.04.2011 தேதியின்படி 18-லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC- பிரிவினருக்கு 3 வருடங்களும், உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்ட தளர்வு வழங்கப்படும்.
சம்பளவிகிதம்: ரூ.5,200}20,200 + தர ஊதியம் 2000.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்:
உயரம்: 157 செ.மீ.
மார்பளவு: 76 செ.மீ. மார்பு விரியும் தன்மை 5 செ.மீ. இருக்க வேண்டும்.
கண்பார்வை: தூரப்பார்வை- கண்ணாடி அணியாமல் 6/6, 6/9
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. இதனை Central Recruitment Fee Stamp -ஆகவோ விண்ணப்ப கட்டணங்களை செலுத்தலாம். The Inspector General (North West Frontier ITBP, Police Poseema Nagar, Chandigarh(UT) என்ற பெயரில் SBI, AFS Chandigarh (Code No. 1495) மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/ EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Inspector General (North West Frontier ITBP, Police Poseema Nagar (Near Airport)
Chandigarh(UT)- 160003.
மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய இணையதள முகவரி:

No comments:
Post a Comment