Thursday, April 14, 2011

இனி...கடல்நீர் எரிபொருள்..!


நிராகரிப்பு எனும் நன்றி மறத்தலை அல்லாஹ் திருப்தி கொள்வதில்லை!

(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையெதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை. நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன் மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமேயாகும். நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான். நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன். (அல்குர்ஆன்: 39:7)
இந்த மாதம்
1891 - இந்திய அரசியலமைப்புசிற்பி எனப் போற்றப்படும்
 சட்ட வல்லுனர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறப்பு
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
Bhimrao Ramji Ambedkar
Ambedkar P25.gif
பி. ஆர். அம்பேத்கர்
வேறு பெயர்(கள்):பாபா சாகேப்
பிறந்த இடம்:Mhow, mathiyapradeshஇந்தியாவின் கொடி இந்தியா
இறந்த இடம்:தில்லிஇந்தியாவின் கொடி இந்தியா
இயக்கம்:தலித் பௌத்த இயக்கம்
முக்கிய அமைப்புகள்:Independent Labour Party, Scheduled Castes Federation, Republican Party of India
மதம்:பௌத்தம்
பழமொழி 
மதியார் வாசலை மிதியாதிருப்பதே
 
உங்களுக்குத் தெரியுமா?
மருதநாயகம் என்று அறியப்படும் முகமது யூசுப் கான் 15-10-1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால்தூக்கிலிடப்பட்டார்.

 சிந்தனை
அன்பைத் தவிர வேறு எந்தப் பொருளாளும் திறமையான
மனிதர்களை விலைக்கு வாங்க முடியாது.

பழம்
கொய்யா

Apple Guava (Psidium guajava)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்) நிலைத்திணை
பிரிவு: பூப்பவை
வகுப்பு Magnoliopsida
துணைவகுப்பு: Rosidae
வரிசை: Myrtales
குடும்பம்: Myrtaceae
துணைக்குடும்பம்: Myrtoideae
Tribe: Myrteae[1]
பேரினம்: Psidium
கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தகவல்

 

 இனி...கடல்நீர் எரிபொருள்..!


 கடல்கள்  தீ  மூட்டப்படும் போது...  (குர்ஆன் - 81 : 6)

(இதென்ன..! ஆறு, ஏரி, குளம், குட்டை என்று சொல்லப்படாமல் கடல்கள் என்றுமட்டும்..?) அப்போதுதான், பொறிதட்டியது... அடாடா..! 

                உடனே  அந்த அதிசயம் சம்பந்தமான புக்மார்க்கை பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை தேடி, அதைத்திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே  ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!

         முதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் condense ஆவதை காணுகிறார். ஆஹா..! அப்படியெனில் கடல்நீரிலிருந்து  Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது..! சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்...  தீ..ப்..ப..ற்..றி..   எ..ரி..ய..   ஆ...ர.. ம்பித்தது..!!
  பொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா..? இதென்ன புதுக்கேள்வி..? பற்றிக்கொள்ளதுதான்..! ஆனால், இதற்கு காரணமாக  இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை...! கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது.  அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது..! ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..!

            கீழ்க்காணும்  வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.

cc
இப்படி நடந்தால்... மொத்தத்தில் இந்த அல்குர்ஆன் அத்தியாயத்தில் இறைவனால் கூறப்படும் கியாமத் நாள் நெருங்குவதற்கான பல்வேறு குறியீடுகளில் மற்றுமொரு அறிகுறியாகத்தான் இருக்கும் அது..! 

                இறைவன் ஒருவனே மிகவும் அறிந்தவன்..!
நன்றி முஹம்மத் ஆஷிக் 
இன்று...
ஏப்ரல் 14:
  • 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்.
  • 1891 - இந்திய அரசியலமைப்புசிற்பி எனப் போற்றப்படும் சட்ட வல்லுனர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறப்பு (படம்).
  • 1950 - தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி இறப்பு.
  • 1988 - சுவிட்சர்லாந்தில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம்ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
டுடே லொள்ளு

Post Comment

No comments:

Post a Comment