உலகில் தனது மன இச்சையைப் பின்பற்றி பொய்யானவற்றை வணங்கிக் கொண்டிருந்தோரின் நஷ்டம்!
"ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாமநாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க." (அல்குர்ஆன்: 39:15)
இந்த மாதம்
மறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995
இவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார்.
1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது
கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில்
(historicist style) வடிவமைத்தார்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச்
சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும்
கட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism)
பழமொழி
இல்லாது பிறாவது
அள்ளாது குறையாது.
உங்களுக்குத் தெரியுமா?
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் உயரம் 58மீட்டர் இதன் ஓளி 3000 வாட் திறன் கொன்டது இதன் மேற்பகுதி எளிதாகச் சுழல்வதற்காக உட்பகுதியில் பாதரசம் நிரப்பப்பட்டுள்ளது.இதன் வெளிச்சம் 18 கடல் மைல் தொலைவு தெரியும்.இது சென்னையின் நான்காவது லைட் ஹவுஸ்.1796 ல் கட்டப்பட்டது.பிறகு 1841 மற்றும் 1894 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன.இப்போதுள்ள லைட் ஹவுஸை நிறுவிய வருடம் 1977.
சிந்தனை
நல்ல மனிதர்கள் அடுத்தவருக்கு பயன்படும் நல்ல செய்தியை
பிரபலப்படுத்த விரும்புவர்.
பழம்
அத்திப்பழம் |
---|
![]() அததி மரம் மற்றும் பழம் |
அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
அத்திப்பழத்தின் பயன்கள்
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள.
தகவல்
வியப்பில் ஆழ்த்திய பெண்மணி
எமக்கு கைகள் இருந்தும் எமது வேலைகளை செய்வதற்கு நாம் இன்னும் ஒருவரை நாடிச்செல்லவேண்டிய நிலையில் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. எம் வேலைகள் அனைத்தும் அடுத்தவரிலயே தங்கியிருக்கின்ற இந்நிலையில் எம்மை எல்லாம் வியப்புக்குள்ளாக்குகின்றது இரு கைகளும் அற்ற இந்த சீனப்பெண்ணின் செயற்பாடுகள். இந்த வீடியோ ஊனம் என்பது உடம்பில் அல்ல அது ஒரு சாதாரண விடயமே என்ற நம்பிக்கைகைய ஊட்டி பார்ப்பவர்களை வியப்புக்குள்ளாக்கும் பெண்மணியை நீங்களும் பாருங்கள். சோம்பறித்தனமாக அடுத்தவர்களை நம்பி வாழும் எம்மவர்களுக்கு நிச்சயம் இது ஓர் எடுத்துக்காட்டு..!
இன்று...
ஏப்ரல் 15:
1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறப்பு.
1912 - பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் கொல்லப்பட்டனர்.
1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

இன்னா தான் இருந்தாலும் நம்ம வூர் குத்து பாட்டுக்கு ஈடாகுமா
No comments:
Post a Comment